📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka May 27, 2026 05:30 PM

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் கேப்டனாக நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் கேப்டனாக நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் கேப்டனாக நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இலங்கை அணியை விக்கெட் கீப்பர்-பேட்டர் குசல் மெண்டிஸ் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.

Published : May 26, 2026 at 3:27 PM IST

ஹைதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஜூன் 3ஆம் தேதி முதலும், டி20 தொடர் ஜூன் 11ஆம் தேதி முதலும், டெஸ்ட் தொடரானது ஜூன் 25ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த தொடர்களுக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இலங்கை அணியை விக்கெட் கீப்பர்-பேட்டர் குசல் மெண்டிஸ் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். டெஸ்ட் அணிக்கு தனஞ்சய டி சில்வா கேப்டனாகச் செயல்படுவார். மேற்கொண்டு இந்த அணிகளின் துணைக்கேப்டான ஆல்-ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் டி20 உலகக் கோப்பை தொடரின் போது கேப்டனாக செயல்பட்ட தசுன் ஷனகா மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்ட சரித் அசலங்காவும் அணியில் சாதரண வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். மேற்கொண்டு நட்சத்திர வீரர்கள் பதும் நிஷங்க, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே மற்றும் தில்ஷன் மதுஷங்க ஆகியோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.

இலங்கை ஒருநாள் அணி: பதும் நிஷங்க, கமில் மிஷார, பவன் ரத்நாயக்க, குசல் மெண்டிஸ் (கேப்டன்), ஜனித் லியனகே, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷங்க, இஷான் மலிங்க, அசித்த பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான்.

A big overseas assignment awaits as Sri Lanka name squads for an all-format tour against West Indies 💪More details 👉 https://t.co/aBqOFwhEM1 pic.twitter.com/rgSMQFffrh

இலங்கை டி20 அணி: பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, லசித் குரூஸ்புள்ளே, பவன் ரத்நாயக்க, குசல் மெண்டிஸ் (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, மிலன் ரத்நாயக்க, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, இஷான் மலிங்க, பினுர ஃபெர்னாண்டோ, நுவான் துஷார.

இலங்கை டெஸ்ட் அணி: பதும் நிஷங்க, லஹிரு உதார, நிஷான் மதுஷ்க, தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டார, கமிந்து மெண்டிஸ், சோனல் தினுஷா, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், அசித்த ஃபெர்னாண்டோ, விஷ்வ ஃபெர்னாண்டோ, லஹிரு குமார, இசித விஜேசுந்தர, கசுன் ராஜித.

இதையும் படிக்கவும்

போட்டி அட்டவணை