விசிகவின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’.. முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தி
உளுந்தூர்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு இன்றைய தினம் நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் 65-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இதனிடையில் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் விசிக பங்கேற்கும் நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் விசிகவின் மாநாடு மற்றும் திருமாவளவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.விஜய்யின் வாழ்த்து செய்திஇது சம்பந்தமாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டு வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தவெகவின் முதல் கொள்கை விளக்க மாநாட்டிலேயே திராவிடமும் தமிழ்த் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என அறிவித்தோம். ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை உருவாக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென எங்கள் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழ் தேசிய எழுச்சி மாநாடு பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையே தமிழகத்தின் உறுதியான மொழிக்கொள்கை என அறிவித்துள்ளோம். தவெகவின் 2026 தேர்தல் ஆவணத்தில் தமிழ் அடையாளம் தனி அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது. எங்களது அரசியல் பயணத்தில் தமிழ் தேசியச் சிந்தனைக் களத்தில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இந்த நிலையில் தாங்கள் முன்னெடுத்து வரும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர் உரிமைகளின் அவசியத்தையும், தமிழ்த் தேசியத்தின் தேவையையும் உலகிற்கு உண்மைத்தன்மையுடன் எடுத்துரைத்து வரும் தங்களுடைய முயற்சி பாராட்டுக்கு உரியது. மேலும் தமிழ்ச் சமூகத்தின் இம்மாநாடு குறித்த ஆழமான சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் புதிய கொள்கை நோக்கங்கள் உருவாகும் ஒரு முக்கியமான தளமாக அமையுமென நம்புகிறேன்.முதல்வர் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்ப்புஇம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று, தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகள், தீர்மானங்கள் மற்றும் செயல் திட்டங்கள் உருவாகிட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விசிகவின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நிகழ்வில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.வெல்லும் ஜனநாயகம்பொதுவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டில் தோழமை கட்சியை சார்ந்த தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த 2024 ஜனவரி 26 அன்று நடைபெற்ற விசிகவின் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டு நிகழ்வில் அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டணி கட்சியில் இருந்த சமயத்திலே அவர் கலந்துக்கொண்ட நிலையில், தவெக அமைச்சரவையில் விசிக பங்கெடுத்துள்ளதை தொடர்ந்து முதல்வர் விஜய் இம்மாநாட்டில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியை சார்ந்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது."CM விஜய் Full Focus இதுல தான்" CM Vijay Meetingதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவுஇதற்கிடையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், விசிக தலைவர் சகோதரர் திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட காலம் தாங்கள் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட விழைகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.