📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 22, 2026 03:01 PM

Vijay Son: புரிதல் இல்லைனா?.. ரிலேஷன்ஷிப் குறித்து ஓபனாக பேசிய ஜேசன் சஞ்சய்!

Vijay Son: புரிதல் இல்லைனா?.. ரிலேஷன்ஷிப் குறித்து ஓபனாக பேசிய ஜேசன் சஞ்சய்!

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநர் அவதாரம் எடுத்து 'சிக்மா' படத்தை இயக்சி உள்ளார். அந்த படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தளபதி விஜயின் மகன் இயக்கும் படம் என்பதால் இந்த படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இப்படம் குறித்து பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி சோஷியல் மீடியாவில் செம டிரெண்டிங் ஆகி வருகிறது.

ஜேசன் சஞ்சய்: அந்தப் பேட்டியில், தனது எதிர்கால காதலி எப்படி இருக்க வேண்டும், தன்னுடைய வாழ்க்கையில் 'கிரீன் பிளாக்' மற்றும் 'ரெட் பிளாக்' விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றி மிகவும் ஜாலியாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார். அதில், இதுவரை எனக்கு காதலி இல்லை, ஆனால், அட்வென்ச்சரான பெண்ணாக இருக்க வேண்டும். புதுப் புது இடங்களுக்குச் செல்வது, எக்ஸ்ப்ளோர் பண்ணுவது, வாழ்க்கையில் எதையாவது ட்ரை பண்ணிக்கொண்டே இருப்பவரை எனக்கு பிடிக்கும். அதே போல, அவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். Financially Independent பெண்ணாக இருக்க வேண்டியது ரொம்பவே முக்கியம். நான் அவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கலாமே தவிர, அவர்களுக்கென்று சொந்த வருமானம் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் Green Flag என்றார்.

Red flag: தொடர்ந்து தனக்குப் பிடிக்காத விஷயங்களை பற்றிய பேசிய ஜேசன் சஞ்சய், காதலிப்பவர்களுக்காக நம்மையே முழுமையாக மாற்றிக் கொள்ள முடியாது. ஒருத்தரோட லிமிடேஷன்ஸ் மற்றும் பவுண்டரீஸை இன்னொருத்தர் புரிஞ்சுக்கணும். அந்தப் புரிதல் இல்லைன்னா அது எனக்குப் பெரிய Red Flag தான். அதேபோல, நம்மை எப்போதுமே கண்காணித்துக்கொண்டே இருக்கக்கூடாது, அதே சமயம் நம் மீது அக்கறை கொண்டவதாக வேண்டும் என்றார்.

ஓரம் போன்னு: மேலும், முக்கியமாகத் தமிழ் சினிமா பார்க்கணும், தமிழ் பாட்டு கேட்கணும், தமிழ் பாட்டெல்லாம் கேட்க மாட்டேன் என்று சீன் போட்டாங்கனா 'ஓரம் போ'ன்னு சொல்லிடுவேன். கொஞ்சமாவது தமிழ் பாட்டு கேட்கணும், அப்போதான் நம்ம ஊரோட Rooted-ஆ இருக்க முடியும். நம்ம பாட்டு பற்றி நிறையப் பேசணும், பழைய நினைவுகள், பாட்டு ரெஃபரன்ஸ் கொடுத்துக் கவுண்டர் போடணும்... நான் பாட்டுக்குச் சிரிச்சிட்டு இருக்கும்போது அவங்க அமைதியா இருந்தாங்கன்னா எனக்கு வைப் ஆகாது, டிஸ்கனெக்ட் ஆயிடும் என்று தனது விருப்பங்களை வெளிப்படையாகப் பேசி அசத்தியுள்ளார். ஜேசன் சஞ்சய்யின் இந்த கியூட் பேட்டி தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.