Once More Trailer: வெளியானது ஒன்ஸ் மோர் டிரைலர்.. ப்பா.. அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் அசத்துறாங்களே!
சென்னை: கான் சிட்டி படத்தைத் தொடர்ந்து ஹீரோவாக அர்ஜுன் தாஸுக்கு அடுத்த படமும் ஹிட் ஆகும் என்கிற அளவுக்கு ஒன்ஸ் மோர் டிரைலர் சூப்பராக கட் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் நடிப்பில் உருவாகியுள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 28ம் தேதி திரைக்கு வருகிறது.
கவின், நயன்தாரா நடித்த ஹாய் திரைப்படத்துடன் அடுத்த வாரம் அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படம் பாக்ஸ் ஆபீஸில் மோதுகிறது. யஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் புதன்கிழமையே ஏகப்பட்ட தியேட்டர்களை பிடிக்க உள்ள நிலையில், இந்த 2 படங்களுக்கும் போதிய தியேட்டர்கள் கிடைக்குமா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.
ஆனால், செப்டம்பர் ரிலீஸ் படங்களுக்கு ஏற்பட்டுள்ள ஓடிடி பஞ்சாயத்து இந்த 2 படங்களுக்கும் இருக்காது என்றும் 4 வாரத்தில் தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் ஓடிடியில் படத்தை பார்த்து விடலாம் என்றும் கூறுகின்றனர்.
ஒன்ஸ் மோர் டிரைலர் வெளியானது: மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோஸ் தொடர்ந்து க்யூட்டான படங்களை கொடுத்து வரும் நிலையில், அந்த வரிசையில் ஒன்ஸ் மோர் படமும் அமையும் என்பதை டிரைலர் ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறது. அர்ஜுன் தாஸ் ஹீரோவாக செம சூப்பராக ஃபார்ம் ஆகி வருகிறார். ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பு மெருகேறிக் கொண்டே போகிறது. விருமன், மாவீரன், நேசிப்பாயா படங்களுக்குப் பிறகு அதிதி ஷங்கரை ஆளையே காணோமே என ஏங்கிய ரசிகர்களுக்கு இந்த டிரைலரில் அவரது நடிப்பு செம ட்ரீட் ஆக அமைந்துள்ளது.
விஜய் படக் கதையா?: விஜய் நடித்த ஒன்ஸ் மோர் படத்தில் அக்காவை காதலித்து ஏமாற்றிவிட்டார் என்றும் அக்கா மரணத்துக்கு விஜய் தான் காரணம் என பழிவாங்க சிம்ரன் வருவதை போல அதிதி ஷங்கர் அர்ஜுன் தாஸை பழிவாங்க துரத்தி துரத்தி காதலிக்கிறாரா? என்கிற சந்தேகத்தையும் டிரைலர் எழுப்புகிறது. ஆனால், முதல் காதல் தோல்வியால் காதலே வேண்டாம் என இருக்கும் அர்ஜுன் தாஸை விரட்டி விரட்டி காதல் செய்யும் கதாபாத்திரத்தில் அதிதி ஷங்கர் அட்டகாசமாக நடித்துள்ளார். ஆகஸ்ட் 28ம் தேதி ஹாய், ஒன்ஸ் மோர் என 2 க்யூட்டான காதல் படங்கள் இளைஞர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.