📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema May 28, 2026 02:32 AM

விஜய் ஆண்டனியின் ’அப்பா குட்டி’ திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் ஆண்டனியின் ’அப்பா குட்டி’ திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் ஆண்டனியின் ’அப்பா குட்டி’ திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ’அப்பா குட்டி’ படத்திற்கு அவரே படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை அமைத்து வருகிறார்.

Published : May 22, 2026 at 9:06 AM IST

சென்னை: விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ’அப்பா குட்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர், நடிகர், படத்தொகுப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் தனது அடுத்த படைப்பான ’அப்பா குட்டி’ திரைப்படம் மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார்.

மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை, மகள் உறவை மையமாகக் கொண்டு ஆக்‌ஷன் கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ளது. மேலும், ’அப்பா குட்டி’ திரைப்படம் தெலுங்கு மொழியில் ’நாநா குட்டி’ என்ற பெயரில் வெளியாகிறது.

மேலும், இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரணி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிபிரியா, இசையருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‎’அப்பா குட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை ஆகிய பணிகளை செய்து வருகிறார். இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சமூகத்துடன் தொடர்புடைய கதைகளை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற மு.மாறன், முன்னதாக ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக்மெயில்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். ‎இதனிடையே விஜய் ஆண்டனி ‘மார்கன்’, ‘சக்தி திருமகன்’ என தொடர்ச்சியாக ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது அப்பா, மகள் உறவை மையமாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு கதையில் நடித்துள்ளார்.

எனவே, இப்படம் ’பிச்சைக்காரன் 2’ படத்திற்கு பிறகு அனைத்து தரப்பு பார்வையாளர்களை ஈர்க்கும் என அப்பா குட்டி படக்குழுவினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பூகி’, இயக்குநர் சசி இயக்கத்தில் நடித்த ‘நூறுசாமி’ ஆகிய படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. அதன் காரணமாக ‘அப்பா குட்டி’ திரைப்படம் இந்த வருடம் விஜய் ஆண்டனிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவரது ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.