📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 16, 2026 04:35 PM

விஜய் சேதுபதி மகன் சூர்யா பிறந்தநாள்.. கொண்டாட்டம் களைகட்டிருக்கே.. வைரல் வீடியோ

விஜய் சேதுபதி மகன் சூர்யா பிறந்தநாள்.. கொண்டாட்டம் களைகட்டிருக்கே.. வைரல் வீடியோ

சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஃபீனிக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியிருந்தார். வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். கடந்த வருடத்தில் வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக நடு சென்டர் வெப் சீரிஸில் நடித்தார். இந்நிலையில் அவரது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ வைரலாகியிருக்கிறது.

சினிமாவில் வெல்ல வேண்டும் என்ற வெறியோடு உழைத்து இன்று பெரிய இடத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. நடிப்பில் எப்படி அவர் எதார்த்தமோ அதேபோல்தான் நேரில் பழகுவதற்கும். யாரிடமும் ஈகோ எதுவும் இல்லாமல் பழகும் அவர் வாழ்க்கையையும், மனிதர்களையும் வேறு ஒரு கோணத்திலிருந்து அணுகுபவர். அதன் காரணமாகவே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் மகன்: விஜய் சேதுபதிக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மகன் சூர்யா சேதுபதி நானும் ரௌடிதான் படத்தில் சிறு வேடத்தில் தலை காட்டி பிறகு தந்தையுடன் சிந்துபாத் படத்தில் நடித்தார். அதனையடுத்து திரையிலிருந்து காணாமல் போன அவர் ஹீரோவாக அறிமுகமாவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் படத்தில் நடித்திருந்தார். இதில் வரலட்சுமி உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். கடந்த வருடத்தில் படமானது ரிலீஸானது.

எப்படி இருந்தது படம்?: இப்படத்தின் பூஜையிலிருந்தே சூர்யாவின் ஆட்டிட்யூடை வைத்து எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தன. பிறகு அதற்கு அவரே விளக்கம் கொடுத்திருந்தார். இப்படி சுற்றிலும் நிகழ்ந்த நெகட்டிவிட்டிக்கு மத்தியில் ரிலீஸான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் சூர்யாவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல பெயர் கிடைத்தது.கண்டிப்பாக தந்தை சேதுபதி மாதிரியே இவரும் திரைத்துறையில் பெரிய இடத்துக்கு செல்வார் என்ற கணிப்புகள் எழுந்திருக்கின்றன.

அடுத்த படம் என்ன?: அந்தப் படத்தை முடித்துவிட்டு நடு சென்டர் என்ற வெப் சீரிஸில் நடித்தார். அது ஹிட்டாகவில்லையென்றாலும் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு டீசன்ட்டான ரெஸ்பான்ஸையே பெற்றது. சூர்யாவின் ரோலும் சூப்பராகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாகவும் அவர் சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார் என்றும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

A post shared by ChennaiTimesTOI (@chennaitimestoi)

பிறந்தநாள் கொண்டாட்டம்: இந்நிலையில் சூர்யா நேற்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். தந்தை, தாய், தங்கை உள்ளிட்டோரின் முன்னிலையில் கேக் வெட்டி அவர்களுக்கு ஊட்டிவிட்டார். சேதுபதியும் பதிலுக்கு ஊட்டிவிட பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது. தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகிவருகிறது.