விஜய் என் ஆளு.. அண்ணி திரிஷாவுக்கு போட்டியா வருவேன்.. அத்துமீறிய ரசிகை.. எங்கே போய் முடியுமோ?
சென்னை: நடிகராக இருந்த விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். அவர் அந்த நாற்காலியில் அமர்வதற்கு சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் ஆகியோர் முக்கிய காரணங்கள் ஆவர். அதிலும் சில பெண் ரசிகைகளோ எங்கள் விஜய்க்கு நாங்கள் மனைவியாககூட இருப்போம் என்றெல்லாம் பேசி கண்டனத்தை சம்பாதித்தார்கள். இந்நிலையில் இளம் ரசிகை ஒருவர் திரிஷா - விஜய்யை மீண்டும் இணைத்து வைத்து பேசியிருப்பது சலசலப்பை உண்டு செய்திருக்கிறது.
விஜய்க்கும் சங்கீதாவுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு திரிஷாதான் காரணம் என்று பலரால் நம்பப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக இருந்தாலும்; விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக திருமணம், துக்க நிகழ்வுகளுக்கு எல்லாம் சென்று வந்தது அவர்களது பேச்சுக்கு பலத்தை கூட்டியது. கண்டிப்பாக இந்த விவகாரம் தேர்தலில் விஜய்க்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றுதான் எல்லோராலும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் வெற்றி பெற்று சி.எம் ஆகிவிட்டார்.
என்ன காரணம்?: இவ்வளவு பெரிய நெகட்டிவ் இமேஜ் விழுந்த பிறகு அவர் வெல்கிறார் என்றால்; அவருக்கு சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆதரவைத்தான் அவர் இத்தனை வருட தன்னுடைய சினிமாக்கள் மூலம் அறுவடை செய்திருக்கிறார். அதிலும், சங்கீதா பிரச்னை பீக்கில் இருந்தபோது ஒரு பெண் ரசிகை, 'எங்கள் விஜய்க்கு நாங்கள் மனைவியாகக்கூட இருப்போம்' என்று சொல்லி பெரிய குண்டை தூக்கி போட்டார்.
கடும் விமர்சனம்: அந்தப் பெண் ரசிகை அப்படி பேசியதை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் அதிர்ச்சிதான் அடைந்தது. இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலம் தமிழ்நாடுதான் என்று பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருக்கும் சூழலில்; ஒருதரப்பினர் இப்படி திரை கவர்ச்சிக்கு அடிமையாகிவிட்டார்களே என்று எதிர்க்கட்சியினர் இன்றுவரை புலம்புகிறார்கள். இந்நிலையில் இன்னொரு இளம் ரசிகை சமீபத்தில் பேசிய விஷயம் மீண்டும் சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகியிருக்கிறது.
என்ன பேசினார்?: அதாவது தனியார் யூடியூப் சேனலிடம் பேசிய இளம் ரசிகர் ஒருவர், 'நான் முதலமைச்சரின் தம்பி' என கூறினார். உடனே அருகே இருந்த இளம்பெண், 'என்னிடம் கேளுங்கள்..நான் யார் தெரியுமா? முதலமைச்சருடைய ஆளு நான். திரிஷாவுக்கே போட்டியாக வருவேன். எங்கள் அண்ணிக்கே போட்டியாக வருவேன்' என ஒரே போடாக போட்டார். அந்தப் பெண்ணுக்கு அதிகபட்சம் 20லிருந்து 25 வயதுக்குள்தான் இருக்கும். இந்த வயதில் இப்படி ஒரு ஸ்டேட்மென்ட்டை விடுவது ஆபத்துக்குரிய ஒன்றாகும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
விஜய் - சங்கீதா பிரச்னை: முன்னதாக, விஜய்க்கு இன்னொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாக கூறி விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார் சங்கீதா. சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெற்றது. அப்போது இரண்டு பேருமே ஆஜராகவில்லை. அடுத்தக்கட்ட விசாரணைக்கு தாங்கள் ஆன்லைனில் ஆஜராக அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். அநேகமாக அடுத்த விசாரணை காணொலியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் திரிஷா இதுவரை அமைதியாகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.