📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 22, 2026 10:02 PM

விஜய் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்துக்கள்

விஜய் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்துக்கள்

சென்னை: திங்கட்கிழமை (ஜூன் 22) தமது 52வது பிறந்தநாளைக் கொண்டாடிய தமிழக முதல்வர் விஜய்க்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமது வாழ்த்துச் செய்தியில், முதல்வர் விஜய்யின் நீண்ட ஆயுளுக்கும் உடல்நலனுக்கும் பிரார்த்திப்பதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“முதல்வர் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் மகிழ்ச்சியோடும் உடல், உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்,” எனத் தமது சமூக ஊடகப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் திரு ஸ்டாலின்.

“தமிழ்நாட்டின் மேன்மைக்கும் உயர்வுக்கும் வழிகாட்டும் நல்லாட்சியை நடத்தவும் முழுமையான உடல்நலனோடும் மனநிறைவோடும் பன்னூறு பிறைகண்டு வாழவும் இயற்கைத் தாயின் அருளைப் பிரார்த்திக்கிறேன்,” என வைகோ கூறியுள்ளார்.

“நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் முதல்வர் விஜய் மக்களுக்குப் பணியாற்ற வாழ்த்துகிறேன்,” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றம் திங்கட்கிழமை (ஜூன் 22) காலை தொடங்கியபோது, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும் உறுப்பினர்களும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே, அவரது பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் தமிழகம் முழுவதும் அன்னதானமும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.