📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health June 22, 2026 11:31 PM

விஜய்க்கு பிடித்த உணவு எது தெரியுமா? தாயார் சோபா சந்திரசேகர் பதில்

விஜய்க்கு பிடித்த உணவு எது தெரியுமா? தாயார் சோபா சந்திரசேகர் பதில்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் முன்பு அளித்திருந்த பேட்டி மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு குறித்து ஷோபா சந்திரசேகர் மனம் திறந்து பேசியிருந்தார்.

சிக்கன் பிரியாணி மீது தனி விருப்பம்

அதில், "விஜய்க்கு சிக்கன் பிரியாணி மிகவும் பிடிக்கும். அதேபோல் வீட்டில் சமைக்கும் எளிமையான உணவுகளையும் விரும்பி சாப்பிடுவார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடுவதை அதிகம் விரும்புவார்," என்று ஷோபா சந்திரசேகர் தெரிவித்திருந்தார். மேலும், உணவில் எப்போதும் அளவோடு இருப்பதையும், உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவதையும் தனது பழக்கமாக வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

வைரலாகும் பழைய பேட்டி

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பழைய பேட்டிகள், அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் பகிர்ந்து வருகின்றனர். அதில், ஷோபா சந்திரசேகர் கூறிய விஜயின் விருப்பமான உணவு குறித்த தகவலும் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.