📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion May 28, 2026 03:34 AM

விஜய்வசந்த் எம்.பி பக்ரீத் வாழ்த்து

விஜய்வசந்த் எம்.பி பக்ரீத் வாழ்த்து

விஜய்வசந்த் எம்.பி பக்ரீத் வாழ்த்து

நாகர்கோவில், மே 28: விஜய்வசந்த் எம்.பி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தியாகத்தின் உயர்வையும், மனிதநேயத்தின் மகத்துவத்தையும், சகோதரத்துவத்தின் அவசியத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கும் புனித பக்ரீத் திருநாளை முன்னிட்டு, அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துக்கள். இஸ்லாம் மார்க்கம் அன்பு, அமைதி, கருணை மற்றும் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம் முகம்மது அவர்கள், ‘உங்களில் ஒருவர் தமக்காக விரும்புவதைத் தனது சகோதரருக்காகவும் விரும்பும் வரை அவர் உண்மையான நம்பிக்கையாளர் அல்ல’ என்று போதித்தார்.

அந்த உயரிய வழிகாட்டுதலின் ஒளியில், இத்திருநாள் சமூகம் முழுவதும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானத்தை மேலும் வலுப்படுத்தட்டும். மதம், மொழி, இன வேறுபாடுகளை தாண்டி அன்பும் சகோதரத்துவமும் நிலைத்திட வேண்டும் என்பதையே பக்ரீத் நமக்கு நினைவூட்டுகிறது. ஏழை எளியோருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து, தியாகம் மற்றும் கருணையின் பண்புகளை வாழ்வில் நடைமுறைப்படுத்தும் இந்த புனித நாள், அனைவரின் இல்லங்களிலும் அமைதி, வளம் மற்றும் நலன்களை நிரப்பட்டும். அன்பும், அமைதியும், மனித நேயமும் நிலைத்திடட்டும். ஈத் முபாரக். இவ்வாறு வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n