📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 16, 2026 06:31 PM

விஜய்யின் 'ஜனநாயகன்'... 3000 திரையரங்குகளை அதிரவைக்க வருகிறது!

விஜய்யின் 'ஜனநாயகன்'... 3000 திரையரங்குகளை அதிரவைக்க வருகிறது!

விஜய்யின் 'ஜனநாயகன்'... 3000 திரையரங்குகளை அதிரவைக்க வருகிறது!

முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

முதலமைச்சர் விஜய்யின் கடைசியான படமான ஜனநாயகன் வருவதால் தளபதியின் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.விரைவில் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு ரசிகர் கூட்டம் காத்திருக்கின்றனர்.எச் வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜயின் நடிப்பில் கடைசி திரைப்படமான ஜனநாயகன் வருகின்ற 23 ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து வசூல் வேட்டையை பிடிக்கவுள்ளது.

இத்திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதியே வர இருந்தது.ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமத்தின் காரணமாக படம் தள்ளி போனது. இத்திரைப்படத்திற்காக கடந்த ஆறு மாதமாக தணிக்கை வாரியத்தின் பரிசீலனையில் இருந்து வந்த ஜனநாயகன் படத்திற்கு சமீபத்தில் "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டது. இது ரசிகர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கிளப்பியுள்ளது.இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் 'ஜன நாயகன்' படம் வருகிற 23-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 950 திரையரங்குகளில் 'ஜன நாயகன்' படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் நாடுகளிலும் சுமார் 3000 திரையரங்குகளில் படம் வெளியாக இருப்பதாக 'ஜன நாயகன்' வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதனைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமாக ‘ஜன நாயகன்' வருவதால் ரசிகர்கள் உற்சாகமாக படத்தை கொண்டாட காத்திருக்கின்றனர். 1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது முடிக்கப்படாமல் இருந்த படங்களை நடித்து முடிப்பதற்காக பதவி ஏற்பு விழாவை ஒத்தி வைத்தார்.1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜூன் 30-ந் தேதி எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், மீனவ நண்பன் படம் வெளியானது.இதேபோல் முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றுக்கொண்ட பின் அவர் நடிப்பில் உருவான 'ஜன நாயகன்' படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே இத்திரைப்படம் ஒடிடியில் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.ஆனால் தற்போது ஒரு புதிய பொலிவுடன் ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் மாஸா களமிறங்க உள்ளது. இது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.