📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 28, 2026 03:32 AM

விளையாட்டு சர்வதேச செஸ் போட்டி தமிழக வீரர்கள் முன்னிலை

Sports

விளையாட்டு சர்வதேச செஸ் போட்டி தமிழக வீரர்கள் முன்னிலை

Google News Tamil Sports

சென்னை: சர்வதேச செஸ் போட்டியில், தமிழக வீரர்கள் பத்து பேர் முன்னிலையில் உள்ளனர்.

அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சதுரங்க சங்க ஆதரவில், ஆர்.வி., செஸ் அகாடமி சார்பில், 2வது சர்வதேச பிடே ரேட்டிங் சதுரங்க போட்டி மாடம்பாக்கத்தில் நடக்கிறது. இதில், 295 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் ஒன்பது சுற்றுகள் அடிப்படையில், ‘சுவிஸ்’ முறையில் நடக்கிறது.

நேற்று வரை நடந்த நான்காவது சுற்று முடிவில், 11 வீரர்கள் தலா 4 புள்ளிகளுடன் கூட்டாக முன்னிலையில் உள்ளனர்.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஸ்ரீராம், முத்துக்குமார் முகேஷ், மோகனா சூர்யா, பரேஷ், அய்யப்பன் சந்தான பிரபு, கிரிதின் துரை, சுதர்ஷன் பாலாஜி, ரோகித் மற்றும் வர்சாஸ் கிருஷ்ணா ஜெயராமன் ஆகியோர் தொடர்ந்து வெற்றிகளை குவித்து பட்டப் போட்டியை சூடுபிடிக்கச் செய்துள்ளனர்.