விளையாட்டு// எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி மாநில கபடி போட்டியில் ‘கில்லி’
விளையாட்டு// எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி மாநில கபடி போட்டியில் ‘கில்லி’
Google News Tamil Sportsசென்னை: சீர்காழியில் நடந்த மாநில கபடி போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன் கோப்பை வென்று அசத்தியது.
மயிலாடுதுறையில் உள்ள சீர்காழியில், ஆடவருக்கான மாநில கபடி போட்டி நடந்தது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 36 முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடின.
போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, அபார ஆட்டத்தின் மூலம் காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதி போட்டியில் பிரிஸ்ட் பல்கலை அணியை எதிர்கொண்ட எஸ்.ஆர்.எம்., அணி, 31 – 13 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதியில் கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப்பை எதிர்த்து விளையாடிய எஸ்.ஆர்.எம்., அணி, கடும் போராட்டத்திற்கு பின் 31 – 27 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, விநாயகா மிஷன் அணியை சந்தித்தது. இரு அணிகளும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இறுதியில் எஸ்.ஆர்.எம்., அணி 34 – 28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.