📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 28, 2026 01:32 AM

விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை

Sports

விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை

Google News Tamil Sports

புதுச்சத்திரம்: ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் விளையாடுவதற்கு போதிய விளையாட்டு மைதானம் இல்லை.

இதனால் விளையாட்டு போட்டியில் ஆர்வம் இருந்தும் விளையாடுவதற்கு இடம் இல்லாமல், இளைஞர்கள் பாதிக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.