விளையாட்டு மகளிர் கால்பந்து லீக் திடீர் ஒத்திவைப்பு
விளையாட்டு மகளிர் கால்பந்து லீக் திடீர் ஒத்திவைப்பு
Google News Tamil Sportsசென்னை, மே 12–
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் மகளிருக்கான சூப்பர் லீக் கால்பந்து போட்டி, நான்கு ஆண்டுகளுக்கு பின் சென்னையில் நேற்று தொடங்க இருந்த நிலையில், மைதானக் குளறுபடியால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற லீக் ஆட்டங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினால் தான், தேசிய போட்டிகளுக்கான தமிழக அணியில் விளையாடும் வாய்ப்பையும், இந்திய அணிக்கு முன்னேறும் வாய்ப்பையும் வீராங்கனையர் எட்டிப்பிடிக்க முடியும். ஆனால் மைதானக் குளறுபடி, நிர்வாகக் குழப்பம் போன்ற பல்வேறு காரணங்கள், நல்ல திறமை கொண்ட வீராங்கனையரை மாவட்ட அளவிலான போட்டிகளிலேயே கட்டுப்படுத்தி விடுகின்றன.
‘தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன்வந்து, இதற்கான தீர்வையும், மைதான வசதிகளையும் செய்து கொடுத்தால் தான், போட்டிகளில் எந்த குளறுபடியும் இருக்காது’ என, வீராங்கனையர் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது.