📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 28, 2026 12:31 AM

விளையாட்டு மலேஷியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டி காஞ்சி, செங்கை வீரர்

Sports

விளையாட்டு மலேஷியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டி காஞ்சி, செங்கை வீரர்

Google News Tamil Sports

சென்னை: சர்வதேச கராத்தே போட்டியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர் – வீராங்கனையர் பதக்கங்கள் குவித்து, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மலேஷியாவின் கோலாலம்பூரில், சர்வதேச ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 22ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடந்தது.

இப்போட்டியில் இந்தியா, மலேஷியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உட்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், தமிழகத்திலிருந்து 15-க்கும் மேற்பட்டோர் திறமையை வெளிப்படுத்தினர்.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தருண்யா ஸ்ரீ, 17, ‘கட்டா’ பிரிவில் தங்கப்பதக்கமும், ‘குமித்தே’ -53 கிலோ பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று அசத்தினார்.

செங்கல்பட்டு வெற்றிவேல், 13, ஆண்கள் ‘கட்டா’ பிரிவில் வெள்ளிப் பதக்கமும், குமித்தே 55 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்.

அதேபோல, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரண், -13, ஆண்கள் ‘கட்டா’ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். தொடர்ந்து செங்கல்பட்டு மித்ரன், 8, ஆண்கள் ‘கட்டா’ பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்று கவனம் ஈர்த்தார்.

மொத்தமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வீரர்கள் ஒரு தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலையம் வந்த சாதனை வீரர்களுக்கு, உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.