விளையாட்டு// தேசிய ஹாக்கி போட்டி தமிழக அணி தோல்வி
விளையாட்டு// தேசிய ஹாக்கி போட்டி தமிழக அணி தோல்வி
Google News Tamil Sportsசென்னை: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்து வரும் தேசிய ஹாக்கி போட்டியில், செகந்திராபாத் ரயில்வே அணியிடம், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணி தோல்வி அடைந்தது.
கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து 15வது லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியை, கோவில்பட்டியில் நடத்தி வருகின்றன. இதில், நாட்டின் 16 முன்னணி அணிகள் போட்டியிடுகின்றன.
நேற்று காலை நடந்த ‘லீக்’ ஆட்டத்தில், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியும், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் களம் கண்டன.
போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் செகந்திராபாத் அணிக்கு சாதகமாக, பாண்டே அஜித், முதல் பீல்டு கோல் அடித்தார். ஆறாவது நிமிடத்தில் சிங் லவ்ப்ரீத் ஒரு பீல்டு கோல், 17வது நிமிடத்தில் பால் ராஜு ஒரு கோல், 25வது நிமிடத்தில் சுனில் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல், 40வது நிமிடத்தில் அஹமது அலி ஒரு பீல்டு கோல் என, அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.
அவர்களை தடுத்து நிறுத்த போராடிய தமிழ்நாடு ஹாக்கி யூனிட் தினேஷ்குமார், 45வது நிமிடத்தில் ஒரு பெனால்டி கார்னர் கோல் மட்டுமே அடித்து, அணிக்கு ஆறுதல் தந்தார்.
முடிவில், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியிடம் 5 – 1 என்ற கோல் கணக்கில், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.