விளையாட்டு தொழிற்சாலை கிரிக்கெட் போட்டி வீல்ஸ் இந்தியா அணி ‘சாம்பியன்’
விளையாட்டு தொழிற்சாலை கிரிக்கெட் போட்டி வீல்ஸ் இந்தியா அணி ‘சாம்பியன்’
Google News Tamil Sportsசென்னை: திருவள்ளூர் மாவட்ட தொழிற்சாலைகளுக்கான கிரிக்கெட் போட்டியில், வீல்ஸ் இந்தியா நிறுவனம், தொடர்ச்சியாக நான்காவது முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றது.
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின், தொழிற்சாலைகளுக்கு இடையிலான 21வது லுாகாஸ் டி.வி.எஸ்., கோப்பை போட்டிகள், நேற்று நிறைவடைந்தன.
செங்குன்றம் அடுத்த எடப்பாளையம், கோஜன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், அசோக் லேலண்ட் வெள்ளிவாயல் சாவடி, வீல்ஸ் இந்தியா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த அசோக் லேலண்ட் அணி, எதிரணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 26.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக அபிஷேக்குமார் 32 ரன்கள் எடுத்தார். வீல்ஸ் இந்தியா அணியின் கார்த்திக் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை பறித்தார்.
வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வீல்ஸ் இந்தியா அணி, தொடக்கம் முதலே நிதானமாக விளையாடியது. ராஜசேகரன் 37 ரன்கள், கவுதம் 51 ரன்கள் சேர்த்ததால், 19.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக நான்காவது முறையாக, வீல்ஸ் இந்தியா அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.