📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 01:32 PM

விமான நிலையத் திட்டம் ரத்து: முதல்

விமான நிலையத் திட்டம் ரத்து: முதல்

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக புதிய இடத்தில் விமான நிலையம் கட்டப்படும். இது பற்றிய அறிவிப்பை பொதுமக்கள் மத்தியில் வெளியிடுவதற்காக முதல்-அமைச்சர் விஜய் விரைவில் பரந்தூருக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2-வது விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையம் உள்ளது. இங்கு அறிஞர் அண்ணா பெயரில் சர்வதேச முனையமும், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்நாட்டு முனையமும் செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் 2-ஆவது விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு விரும்பியது. இதற்காக தி.மு.க. ஆட்சி காலத்தில் பரந்தூர் பகுதியில் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது.

மொத்தம் 5,746 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் சுமார் 2,500 ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு சொந்தமானவை. மீதியுள்ள நிலங்கள் அரசு மற்றும் அவற்றின் நிறுவனங்களுக்கு சொந்தமானவை.

ரூ.27,400 கோடி ஒதுக்கீடு

ஆனால் இங்கு விமான நிலையம் கட்ட அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் ஏனென்றால் ஏராளமான விவசாய நிலங்கள், ஏரிகள் அழிக்கப்படும் என்றும், வேறு இடத்திற்கு குடிபெயர்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மக்கள் போராட்டம்

ஆகவே அப்பகுதிமக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில்ஈடுபட்டார்கள். பரந்தூர் பகுதி மக்கள் இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய், கட்சி தொடங்கிய சமயத்திலேயே ஆதரவு தெரிவித்தார். 2025-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி பரந்தூருக்குசென்று போராடும் விவசாயிகளுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

இந்தநிலையில், அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் இத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் வாக்குறுதிக்கேற்ப இத்திட்டத்தை ரத்து செய்துள்ளதாகவும் அதற்கு மாற்றாக புதிய இடத்தில் விமான நிலையம் கட்டப்படும். இது பற்றிய அறிவிப்பை பொதுமக்கள் மத்தியில் வெளியிடுவதற்காக முதல்-அமைச்சர் விஜய் விரைவில் பரந்தூருக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமான நிலைய திட்டம் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் அடுத்தகட்ட நிலை குறித்து அரசு விரைவில் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.