📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 21, 2026 11:31 PM

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆட்சியாளர்களுக்கு இல்லை

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆட்சியாளர்களுக்கு இல்லை

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆட்சியாளர்களுக்கு இல்லை - கனிமொழி குற்றச்சாட்டு

பாளையங்கோட்டை சிறை திமுகவினருக்குப் புதிதல்ல என்றும், அது திமுகவினருக்கு பெருமைதான் எனவும் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

Published : July 21, 2026 at 5:47 PM IST

திருநெல்வேலி: தன்னை விமர்சிப்பவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆட்சியாளர்களிடம் இல்லை என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று நேரில் வந்து சந்தித்தனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கனிமொழி மார்க்கண்டேயனிடம் கேட்டறிந்தார். மேலும் கட்சியின் சார்பில் தேவையான சட்ட உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என அவரிடம் கனிமொழி உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சிறை வளாகத்தில் கனிமொழி எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாளையங்கோட்டை சிறை திமுகவினருக்குப் புதிதல்ல, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். திமுகவினர் யார் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாலும், அவர்கள் அதனைப் பெருமையாகவே கருதுவார்கள்.

இதையும் படிங்க:நெல்லை மேயருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் திருப்பம்; திமுக மா.செ. மீது மேயர் குற்றச்சாட்டுகாவல்துறையை எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். தன்னை விமர்சிப்பவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆட்சியாளர்களிடம் இல்லை. யாருக்கோ பயந்து கொண்டு ஆட்சி செய்கிறார்கள். தமிழ்நாட்டின் நலன் என்று வரும்போது திமுக தனது கொள்கையிலிருந்தும், கருத்துகளிலிருந்தும் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை; இனியும் விட்டுக்கொடுக்காது. தமிழக நலன், தமிழக உரிமை சார்ந்த விஷயங்களில் கடந்த காலங்களிலேயே அதிமுகவோடு இணைந்து செயல்பட்டு இருக்கிறோம்.

எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் மசோதாவிற்கு திமுக ஆதரவு அளிக்கக்கூடும் என பல்வேறு செய்திகள் வெளியாகி வருவது குறித்த கேள்விக்கு, "மற்றவர்களின் அனுமானங்களுக்கு தாங்கள் பதில் சொல்ல முடியாது" என்றார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் கையாளப்பட்ட விதம் குறித்த கேள்விக்கு, "அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வருகிறது. நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் இருக்கிறது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது கடும் கண்டனத்திற்கு உரியது" எனத் தெரிவித்தார்.