📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 29, 2026 05:03 AM

விரைவு பஸ்கள் தவிர அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயணம்?

விரைவு பஸ்கள் தவிர அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயணம்?

சென்னை: எஸ்.இ.டி.சி., எனப்படும், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் தவிர, மற்ற அனைத்து அரசு பஸ்களிலும், மகளிர் இலவச பயண திட்டத்தை செயல்படுத்த, போக்குவரத்துக் கழகங்கள் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மகளிர் இலவச பயண திட்டத்தின்படி, சென்னையில், சாதாரண, சொகுசு கட்டணத்தில் இயக்கப்படும் 3,633 பஸ்களிலும், மாவட்டங்களில் டவுன் மற்றும் சாதாரண கட்டண பஸ்கள் உட்பட, 9,000க்கும் மேற்பட்ட பஸ்களிலும் பயணம் செய்யலாம். இதற்கான வழிகாட்டு முறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடும்.

அதேபோல், எஸ்.இ.டி. சி., எனப்படும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் தவிர, மற்ற அனைத்து பஸ்களிலும், இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாரியாக, புள்ளி விபரங்களை சேகரித்து வருகிறோம். இந்த அறிக்கை, தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். இந்த விரிவாக்க திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் . இவ்வாறு அவர்கள் கூறினர்.