📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News May 31, 2026 07:01 PM

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டது; புகார்களுக்கு சிபிஎஸ்இ பதில்

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டது; புகார்களுக்கு சிபிஎஸ்இ பதில்

புதுடில்லி: விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டது; மேலும் ஏதேனும் உள்ளதா என்று கண்டறியும் நடக்கிறது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ நடத்திய தேர்வின் 'ஆன்ஸ்கிரீன் மார்க்கிங்' எனப்படும் கணினி வழி விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் குளறுபடிகள் இருப்பதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இந்நிலையில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கை: இணையதளத்தில் கண்டறியப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டது. மேலும் குறைபாடுகள் இல்லை என்பதை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுவெளியில் சுட்டிக்காட்டப்படும் பாதுகாப்புக் குறைபாடுகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் ஐஐடிக்களிலிருந்து சைபர் பாதுகாப்பு நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது

இத்தகைய குறைபாடுகளை சுட்டிக்காட்டிய குடிமக்கள் மற்றும் நெறிமுறை ஹேக்கர்களுக்கு சிபிஎஸ்இ நன்றி தெரிவிக்கிறது. அவர்களில் சிலரை நேரடியாகத் தொடர்பு கொண்டது. மேலும் குறைகள் ஏதும் இருந்தால் எங்கள் குழுவினரை secy-cbse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.