📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 10, 2026 03:31 PM

வணிக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு

வணிக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களுக்கான கடுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.மேற்கு ஆசிய போர் காரணமாக சிலிண்டர் விநியோகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்தியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடயே முதல் கட்ட போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், எண்னெய் விநியோகம் சீராக தொடங்கியதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன

. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. விநியோகத்தின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது.

மேற்கு ஆசிய நெருக்கடிக்கு முன்பாக இருந்த நிலைக்கு விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நெருக்கடியின் தொடக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்த எல்பிஜி விநியோகம், நெருக்கடிக்கு முந்தைய நுகர்வு அளவுகளில் 50% அளவுக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. இது வர்த்தக மற்றும் தொழில் நுகர்வோருக்கு பயன் அளிக்கும்.மேற்கு ஆசிய நெருக்கடியின் போது, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.