📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 18, 2026 04:31 PM

வந்தே மாதரம் பாடலை அவமதிப்போருக்கு சிறைத் தண்டனை விதிக்க பரிந்துரை

வந்தே மாதரம் பாடலை அவமதிப்போருக்கு சிறைத் தண்டனை விதிக்க பரிந்துரை

புதுடெல்லி: வந்தே மாதரம் பாடலை அவம​தித்​தால் அல்​லது அதைத் தடுத்தால் மூன்று ஆண்டுகள்வரை சிறை, அபராதம் வழங்க வகை செய்​யும் புதிய சட்ட முன்வரைவை (மசோதா) திங்​கட்​கிழமை (ஜூலை 20) தொடங்கும் நாடாளுமன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடரில் மத்​திய அரசு தாக்​கல் செய்யவுள்ளது.

தேசிய கீத​மான ‘ஜன கண மன’ இசைக்​கப்​படும் அரசு நிகழ்ச்சிகளில், தேசி​யப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவதை அல்​லது பாடு​வதைக் கட்​டாய​மாக்கி மத்​திய உள்​துறை அமைச்​சு வெளி​யிட்ட வழி​காட்​டு​தல்​களைத் தொடர்ந்து மத்​திய அமைச்​சரவை இந்தச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உள்​துறை அமைச்​சர் அமித்ஷா இந்தச் சட்ட முன்வரைவை நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​ய​விருக்​கிறார்.

இந்த மசோதா மக்​களவை, மாநிலங்​களவை​யில் நிறைவேற்றப்பட்ட பிறகு, தேசிய கீதம், தேசி​யக் கொடி, அரசியலமைப்​புச் சட்டம் போன்ற தேசியச் சின்​னங்​கள் வரிசையில் இனி தேசி​யப் பாடலை அவம​திப்​பதும் தண்டனைக்குரிய குற்​ற​மாக மாறும்.

மக்​களவை​யில் அறி​முகம் செய்​யப்​பட​வுள்ள பிற சட்ட முன்வரைவுகளில், பிறப்​பு, இறப்பு பதிவைத் தாமதமாகச் செய்வதைத் தடுக்க வழி செய்யும் என்று கூறப்படுகிறது.