வடகோவை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களுக்கு எதிர்ப்பு: பெயிண்ட் ஊற்றி அழித்த நபரால் பரபரப்பு
கோவை வடகோவை ரயில் நிலையம் சுமார் 11.5 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு வசதிகளுடன் புதிய வடிவமைப்பில் ரயில் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வடகோவை சந்திப்பு என பல்வேறு இடங்களில் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
வடகோவை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களுக்கு எதிர்ப்பு: பெயிண்ட் ஊற்றி அழித்த நபரால் பரபரப்பு#coimbatorepic.twitter.com/CNmgaB52lg
அவ்வாறு பொறிக்கப்பட்ட எழுத்துக்களில், ரயில் நிலைய முகப்பில் இந்தியில் மட்டும் எழுத்துக்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று மாலை இந்தி எழுத்துக்கள் அழிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போராட்டத்திற்கு முன்னதாகவே நள்ளிரவில் அந்த இந்தி எழுத்துக்கள் மீது பெயிண்ட் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளன. ஆதித் தமிழர் பேரவை கட்சியைச் சேர்ந்த ராவணன் என்பவர், ஒரு சிறிய பக்கெட்டில் பெயிண்டை எடுத்துச் சென்று, இந்தியில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் மீது ஊற்றி அவற்றை அழிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.