10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
ETV Bharat / education-and-career
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - தேர்வு தேதிகளின் விவரம் இதோ
மார்ச்/ஏப்ரல் 2027இல் நடைபெறவுள்ள 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.
Published : October 14, 2026 at 12:51 PM IST
சென்னை: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3-ஆம் தேதி முதலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 17-ஆம் தேதி முதலும் பொதுத்தேர்வு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
சென்னை பேராசிரியர் அன்பழன் கல்வி வளாகத்தின் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்க கூட்ட அரங்கில் இன்று (அக்.14) நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு அரியர் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
தமிழ்நாடு பொதுத்தேர்வு 2027 தேதிகள் அறிவிப்பு
அதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 3 முதல் மார்ச் 29ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 17 முதல் ஏப்ரல் 12 வரையும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
11ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கு மார்ச் 5 முதல் ஏப்ரல் 1 வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
அதற்கு முன்னதாக, 12ஆம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. அதே போன்று, 10ஆம் வகுப்புக்கு பிப்ரவரி 19 முதல் 26 வரை செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?
தொடர்ந்து தேர்வு முடிந்த பின்னர், 12ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு அடுத்த ஆண்டு மே 7ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 20ஆம் தேதியும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2027 அட்டவணை
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2027 அட்டவணை
11ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2027 அட்டவணை
2026-27ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்விற்கு மேல்நிலை வகுப்பில் சுமார் 7,90,000 மாணவர்களும், பத்தாம் வகுப்பிற்கு சுமார் 8,70,000 மாணவர்களும் தேர்வெழுதவுள்ளனர். அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1:15 வரை நடைபெறவுள்ளது.