📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 30, 2026 11:04 PM

13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாநகர காவல் ஆணையர் ஜோசி நிர்மல் குமார் காவல்துறை நவீனமயமாக்கல் ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் ஏ.ஜி.பாபு சேலம் மாநகர ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமானி சென்னை பெருநகர உளவுப்பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி தேவராணி சேலம் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.