2026 தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்: விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
2026 தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்: விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் சார்ந்தவர்களும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.
தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் அனைத்து சுற்றுலா ஏற்பாட்டளர்கள், சுற்றுலா தொழில் முனைவோர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணைய தள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி