📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 30, 2026 10:03 AM

2026 உலகக்கோப்பையில் குல்தீப் யாதவ் செய்த செயலால் உச்சகட்ட கோபம்.. சூர்யகுமார் யாதவ் விளக்கம்

2026 உலகக்கோப்பையில் குல்தீப் யாதவ் செய்த செயலால் உச்சகட்ட கோபம்.. சூர்யகுமார் யாதவ் விளக்கம்

2026 உலகக்கோப்பையில் குல்தீப் யாதவ் செய்த செயலால் உச்சகட்ட கோபம்.. சூர்யகுமார் யாதவ் விளக்கம்

மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மீது அப்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதற்கான காரணத்தை தற்போது சூர்யகுமார் யாதவ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில் பேசிய சூர்யகுமார் யாதவ், "பாகிஸ்தான் போட்டியின் போது பந்துவீச குல்தீப் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால், சூழலுக்கு ஏற்ப நான் அக்சர் படேல், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை மட்டுமே பந்துவீச வைத்தேன். இதனால் குல்தீப்பிற்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. 'எனக்கு ஏன் பந்துவீச வாய்ப்பு தரவில்லை?' என்று அவர் சற்று ஏமாற்றத்துடன் இருந்தார்" என்றார்.

தொடர்ந்து பேசிய சூர்யகுமார், "ஆட்டத்தின் 18வது ஓவரில் ஷாகின் அப்ரிடி அடித்த பந்தை லாங்-ஆன் திசையில் நின்றிருந்த குல்தீப் யாதவ் மிகச் சாதாரணமாக ஓடிவந்து கேட்சை தவறவிட்டார். அவரது திறமைக்கு அது மிகவும் எளிதான கேட்ச் ஆகும். அவர் முழு முயற்சி செய்து அந்த கேட்சை தவறவிட்டிருந்தால் எனக்கு கவலை இல்லை. ஆனால், அவர் எந்த முயற்சியும் எடுக்காமல் சாதாரணமாக ஓடிவந்து கோட்டைவிட்டார். பந்து எல்லையைத் தாண்டி சிக்ஸராகச் சென்றதால் எனக்கு அவர் மீது கடும் கோபம் ஏற்பட்டது" என்று கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின்னர் இருவரும் கோபமான பார்வைகளைப் பரிமாறிக் கொண்டதால் மைதானத்தில் சிறிது பரபரப்பு நிலவியது. எனினும், அது நட்பு ரீதியிலான கிண்டல் மட்டுமே என்று சூர்யகுமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் போட்டி முடிந்த பின் அகமதாபாத் சென்றதும், இந்த சூழ்நிலையை மாற்ற குல்தீப்புடன் இணைந்து சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ 'ரீல்' செய்ததாகவும் சூர்யகுமார் கூறினார்.

மேலும் இந்த பேட்டியில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 15 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய போது தமக்கு ஏற்பட்ட பதற்றம் குறித்தும் சூர்யகுமார் பகிர்ந்துள்ளார். அந்த போட்டியில் திலக் வர்மாவின் 69 ரன்கள் பங்களிப்பால் இந்தியா அபாரமாக மீண்டது குறிப்பிடத்தக்கது.