27 வயதில் உயிரிழந்த நடிகை.. தூக்கத்திலேயே பிரிந்த உயிர்!
27 வயதில் உயிரிழந்த நடிகை.. தூக்கத்திலேயே பிரிந்த உயிர்!
பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் 27 வயதில் மும்பையில் தூக்கத்திலேயே உயிரிழந்தது திரையுலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் தனது 27 வயதில் மும்பையில் உயிரிழந்துள்ளார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டுக்கும் மேலாக உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை அனன்யா ராஜ் எதிர்கொண்டதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். '7 Hours to Go’, ‘The Final Exit’, ‘Ghost’ உள்ளிட்ட படங்களில் அனன்யா ராஜ் நடித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்த அனன்யாவின் மரணம் குறித்து அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் குடும்பத்தினர், “இது அனன்யாவின் குடும்பம். மிகுந்த வேதனையுடன், ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை அனன்யா காலமானார் என்பதை நாங்கள் அறிவிக்கிறோம். அவர் உறக்கத்தில் அமைதியாக உயிர் நீத்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக, அவர் உடல் மற்றும் மன ரீதியான துன்பங்களால் அவதிப்பட்டு வந்தார். அவற்றை வெல்வதற்காக அவர் ஒரு வீராங்கனையைப் போலப் போராடினார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மறைந்த அனன்யாவை 'உறுதியான குணம் கொண்ட பெண்' என்று குறிப்பிட்ட அவரது குடும்பத்தினர், “அவள் உறுதியான குணம் கொண்ட பெண்ணாக ராணியைப் போல வாழ்ந்தாள். பச்சா, உன் இழப்பு பெரும் குறையாக உணரப்படும்” என்று வருத்தம் தெரிவித்தனர்.
A post shared by Ananya ✨ (@ananyaraj.official)
அவரது ஆன்மா சாந்தியடைய உங்கள் அனைவரையும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தச் சோதனையான காலகட்டத்தில், நாங்கள் தனிமையையும் அமைதியையும் பேண விரும்புகிறோம்” என்று அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அகில இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் இரங்கல்!
நடிகை அனன்யா ராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் அகில இந்திய சினிமா தொழிலாளர் சங்கம், "ஆழ்ந்த துக்கத்துடனும் கனத்த இதயத்துடனும், அகில இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் (AICWA), 2026 ஜூலை 15 அன்று தனது 27வது வயதில் அகால மரணமடைந்த நடிகை அனன்யா ராஜுக்கு இரங்கல் தெரிவிக்கிறது. அவரது மறைவுக்கு பின் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, அவரது குடும்பத்தினர் தற்போது அவரது மறைவுச் செய்தியைப் பொதுவெளியில் அறிவித்துள்ளனர். குடும்பத்தினரின் கூற்றுப்படி, அனன்யா கடந்த ஒரு வருடமாக உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வந்தார், இந்தக் காலகட்டத்தில் அவர் மிகுந்த உடல் மற்றும் மன ரீதியான சவால்களை எதிர்கொண்டார்.
🕊️ AICWA Pays Tribute to Actress Ananya Raj 🕊️With profound grief and a heavy heart, the All Indian Cine Workers Association (AICWA) mourns the untimely demise of actress Ananya Raj, who passed away at the young age of just 27 on 15 July 2026.Her family has now made the news… pic.twitter.com/Wi5pnC3wFO
இந்த கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அவரது குடும்பத்தினர் அவரை ஒரு ராணியைப் போல வாழ்ந்த, மன உறுதி கொண்ட பெண்ணாக நினைவுகூர்ந்தனர். அனன்யா ராஜ், '7 ஹவர்ஸ் டு கோ' (2016), 'தி ஃபைனல் எக்ஸிட்' (2017), மற்றும் 'கோஸ்ட்' (2019) உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் ஒரு பகுதியாக இருந்தார். அவரது அகால மரணம் பாலிவுட் மற்றும் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளது.