2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 406 ரன் இலக்கு
குவஹாத்தி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில், ரோகித் சர்மா சதமடித்து அசத்தினர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குவஹாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் நடைபெறுகிறது.
3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றமாக ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக, காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அவ்கிப் நபி இன்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஜான் கேம்ப்பெல் மற்றும் கார்ட்டி நல்ல துவக்கம் கொடுத்தனர்.
இருப்பினும் கார்ட்டி 9 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதிரடியாக விளையாடிய ஜான் கேம்ப்பெல்(101) சதம் அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப்(104) அதிரடியாக ரன் சேர்க்க அவரும் சதம் விளாசினார். இவர்கள் இருவரும் அவுட் ஆகி வெளியேறிய நிலையில் அமிர் ஜான்கூ அதிரடியாக விளையாடிய நிலையில் சதம் கடந்தார். அவர் 114 ரன் எடுத்திருந்தபோது ரவீந்திர ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தார்.ரோஸ்டன் சேஸ் ஆட்டமிழக்காமல் 29 ரன்னும், ஷாமர் ஜோசப் ஆட்டமிழக்காமல் 14 ரன் சேர்க்க,இறுதியில் 50 ஓவரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 405 ரன் குவித்தது. இந்திய தரப்பில் குல்தீப், ஜடேஜா, பிரார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
406 ரன் என்ற கடின இலக்குடன் விளையாடி வரும் இந்திய அணியின் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் சிறந்த துவக்கத்தை அளித்தனர். ரோகித்சர்மா அரைசதம் கடந்த நிலையில், சுப்மன் கில் 85 பந்துகளில் 144 ரன் எடுத்து விளையாடி வருகிறார். அடுத்து சதமடித்த ரோகித் 75 பந்துகளில் 101 ரன் எடுத்தார்.