📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 01, 2026 01:04 AM

Meesaya Murukku 2 Box Office: வெளிநாடுகளில் பெரிதாக கல்லா கட்டும் மீசைய முறுக்கு 2.. 5 நாள் வசூல்!

Meesaya Murukku 2 Box Office: வெளிநாடுகளில் பெரிதாக கல்லா கட்டும் மீசைய முறுக்கு 2.. 5 நாள் வசூல்!

சென்னை: குஷ்பு சுந்தர் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி தமிழா இயக்கி நடித்த மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. 4 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் அதிகபட்சமாக 51 கோடி வசூலை கடந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுந்தர். சி மற்றும் ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட படக்குழுவினர் அறிவித்தனர்.

மீசைய முறுக்கு 2 படத்தின் வெற்றியையும் நடிகை குஷ்புவின் பிறந்தநாளையும் ஒரே மேடையில் கேக் வெட்டிக் கொண்டாடினர். படத்தில் வருவதை போலவே கானா கேங் எனும் இசைக்குழுவை நிஜத்திலும் உருவாக்கி 3 கானா கலைஞர்களை இசையமைப்பாளர் தேவா முன்னிலையில் அறிமுகமும் செய்து வைத்தனர்.

கடந்த வாரம் வெளியான படங்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி படத்தை வசூலில் முந்தியது. இந்தியளவில் 20 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியதாக சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் வெப்சைட்டுகள் இந்த தகவலை சொல்லியுள்ள நிலையில், படத்தின் வெற்றிக்கு ஓவர்சீஸ் வசூல் அதிகளவில் கைகொடுத்துள்ளது என்கின்றனர்.

5 நாள் வசூல்: செவ்வாய்க்கிழமையான நேற்று மீசைய முறுக்கு 2 திரைப்படம் தமிழ்நாட்டில் அதிகபட்சம் 2.35 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 5 நாட்களில் 22 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் இந்த படம் வசூல் செய்துள்ளது என சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், படக்குழுவின் பாக்ஸ் ஆபீஸ் கணக்கோ அதற்குள் 50 கோடியை கடந்து விட்டது.

50 கோடி வசூல்: ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த படங்களிலேயே மீசைய முறுக்கு 2 திரைப்படம் தான் அவருக்கு முதல் 50 கோடி படம் என படக்குழு கொண்டாடியுள்ளனர். 4 நாட்களிலேயே 51.3 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரையே நேற்று வெளியிட்டது. இந்த வாரம் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க படக்குழுவும் ஹிப்ஹாப் ஆதி ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

5 படங்கள் போட்டி: இந்த வாரம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விஜய் சேதுபதியின் பத்தா, நிவின் பாலி நடித்த ஏழு கடல் ஏழு மலை, சந்திப் கிஷன் நடித்துள்ள சிக்மா, பகத் பாசில் நடித்த டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் மற்றும் அசோக் செல்வனின் அன்பில் அவன் உள்ளிட்ட படங்களும் பாக்ஸ் ஆபீஸில் மீசைய முறுக்கு 2 படத்துக்கு டஃப் கொடுக்க காத்திருக்கின்றன.