📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 12, 2026 10:01 AM

30 வினாடி விளம்பரத்திற்கு 40 கோடி? பொருளின் பேரை கூட சொல்லாம டாப் ஹீரோ வாங்கிய சம்பளம்!

30 வினாடி விளம்பரத்திற்கு 40 கோடி? பொருளின் பேரை கூட சொல்லாம டாப் ஹீரோ வாங்கிய சம்பளம்!

சென்னை: சினிமாவில் ஒரு படம் கரைசேர வேண்டுமென்றால் தயாரிப்பாளர் ரத்தமும் சதையுமாய் கொட்டும் பணத்தை விட, நடிகர்களின் உழைப்பும் புரமோஷனும் ரொம்பவே முக்கியம். ஆனால், இப்போது டாப் நடிகர்கள் சிலர் அடிக்கும் லூட்டியை பார்த்தால் தயாரிப்பாளர்களின் வயிறு எரியாமல் என்ன செய்யும்? சமீபத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஒருவர் குறித்து கசிந்துள்ள அந்த சூடான கிசுகிசு தான் இப்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

விளம்பரத்துக்கு 40 கோடி: தமிழ் சினிமாவின் 'டாப் லீக்' நடிகர்களில் ஒருவராக இருக்கும் அந்த மாஸ் நடிகர், சமீபத்தில் ஒரு பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரே ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு அந்த நடிகர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதை கேட்டா அப்படியே நீங்க ஷாக் ஆயிடுவீங்க... முப்பதே முப்பது வினாடி விளம்பரத்துக்கு அஸால்ட்டாக ரூ.40 கோடியை வாங்கி இருக்கிறார். அதுமட்டுமா? நான் அந்த பொருளோட பிராண்ட் பேரை என் வாயால உச்சரிக்க மாட்டேன். வேணும்னா பேக்ரவுண்ட்ல அந்த பேரைக் போட்டுக்கோங்க என்று கண்டிஷன் போட்டுத்தான் நடித்தாராம். பொருளின் பெயரைக் கூட சொல்லாமல் ஒரே நாளில் 40 கோடியை அள்ளிய அந்த நடிகரின் 'ஆட்டிடியூட்' தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

படம் தோத்தா எனக்கு என்ன?: விளம்பரத்துக்கு இவ்வளவு கண்டிஷன் போட்டு பல கோடிகளை சுருட்டும் நடிகர்கள், பல நூறு கோடிகளை முதலீடு செய்யும் படத்தின் புரமோஷனுக்கு வருகிறார்களா என்றால் அதுதான் இல்லை. ஒரு காலத்தில் நடிகர்கள்னா தயாரிப்பாளரோட நலனை யோசிப்பாங்க. படம் ஓடணும், தயாரிப்பாளர் நஷ்டப்பட கூடாதுன்னு ஊர் ஊரா போய் புரமோஷன் பண்ணுவாங்க. ஆனா இப்போ இருக்குற டாப் நடிகர்களுக்கு சம்பளத்தை உயர்த்துறதுல இருக்குற ஆர்வம், படத்தோட வெற்றியில இல்லவே இல்லை. படம் ரிலீஸ் ஆனா புரமோஷனுக்கு வர மாட்டாங்க... படம் தோத்து தயாரிப்பாளர் தெருவுக்கு வந்தாலும் கவலைப்பட மாட்டாங்க என பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். கோடிகளில் சம்பளத்தை மட்டும் ஏற்றிக்கொண்டே போகும் இந்த 'கெத்து' நடிகர்கள், தயாரிப்பாளர்களின் உழைப்பையும் முதலீட்டையும் எப்போது மதிக்கப் போகிறார்கள் என ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.