ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்குப் புதிய நலத்திட்டங்கள்: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு
ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்குப் புதிய நலத்திட்டங்கள்: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு
சென்னை: ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைக்கப்படும் என்று சமூக நீதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.160 கோடியில் 150 சமூக நீதி விடுதிகள் கட்டப்படும். தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும். ஆதிராவிட குடும்ப தலைவிகளுக்காக விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும். வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்காக இனிய இல்லம் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அரண்- விடுதி பாரமரிப்பு மேலாண்மை அமைக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கோவையில் வணிக மையம் கட்டப்படும். உதகையில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் சென்னையில் பண்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.