📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 15, 2026 02:01 PM

ஆட்டத்தைத் தொடங்கப்போகும் வடகிழக்குப் பருவமழை...இனி அடங்கவே மாட்டான்...வானிலை அலர்ட்!

ஆட்டத்தைத் தொடங்கப்போகும் வடகிழக்குப் பருவமழை...இனி அடங்கவே மாட்டான்...வானிலை அலர்ட்!

ஆட்டத்தைத் தொடங்கப்போகும் வடகிழக்குப் பருவமழை...இனி அடங்கவே மாட்டான்...வானிலை அலர்ட்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை குறைந்து காணப்பட்ட நிலையில்,வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவி வருவதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆட்டத்தை தொடங்கும் வடகிழக்கு பருவமழை!

இந்நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி,தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

மத்திய கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வரும் நிலையில்,குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைப்பொழிவு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

சென்னை மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் தேங்குவதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.