ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு நடவடிக்கை: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
ஆவின் பச்சை பால் தட்டுப்பாடு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு நடவடிக்கை
ஆதார் கார்டு வழங்காதவர்களுக்கு பால் இல்லை என மறுக்கப்படுகிறது. ஆவின் பால் விற்பனை செய்யும் சிறு கடைகளுக்கு, ஆவின் பால் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவின் பால் வாங்கும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.