📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 26, 2026 10:01 AM

அனிருத் வீட்டில் கொண்டாட்டம்.. சித்தி மகனுக்கு சூப்பர் திருமணம்.. அடுத்தது அனிதான்.. ரஜினியும் ஆஜர்

அனிருத் வீட்டில் கொண்டாட்டம்.. சித்தி மகனுக்கு சூப்பர் திருமணம்.. அடுத்தது அனிதான்.. ரஜினியும் ஆஜர்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். எக்கச்சக்க படங்களுக்கு இசையமைத்துவரும் அவர்; இத்தனை வருடங்கள் சிங்கிளாக இருந்தார். ஒருவழியாக திருமணம் செய்துகொள்ள ஓகே சொல்லிவிட்டார். அவருக்கும், காவ்யா மாறனுக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அனிருத்தின் சித்தி மகனுக்கு நேற்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

தனுஷ் மூலம் சினிமாவுக்குள் வந்தவர் அனிருத். முதல் படமான 3 ப்ளாப் ஆனாலும் அவரது இசையும், பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன. இதன் காரணமாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர்வரை ஓவர் நைட்டில் பிரபலமானார் அனி. அந்தப் படத்துக்கு பிறகு வரிசையாக படங்களுக்கு இசையமைத்து சென்சேஷனல் ஆனார் அவர். இதனால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவே மாறிவிட்டார். பல முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்கள் எல்லாம் அவரை தேடி போனார்கள்.

அதிக சம்பளம்: ஒருகட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற கிங் மேக்கர்களையே ஓரங்கட்டும் நிலைமைக்கு அவர் சென்றுவிட்டார். குறிப்பாக சம்பள விஷயத்தில் இசைப்புயலை அனிருத் ஓவர் டேக் செய்துவிட்டார் என்றும்; அவர் ஒரு படத்துக்கு பத்து கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குகிறார் என்றும் ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் என்னதான் அவர் டாப் இசையமைப்பாளர் என்ற இடத்துக்கு சென்றாலும்; அவர் அமைக்கும் இசை கடுமையான விமர்சனங்களை சந்திப்பதும் வழக்கம்தான்.

ஸ்கோர் செய்த அனிருத்: அவரது இசையமைப்பில் கடைசியாக டிசி திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் தரமான இசையைத்தான் கொடுத்திருந்தார். இப்படிப்பட்ட இசையை எல்லாம் தனக்குள் வைத்துக்கொண்டுதான்; பல படங்களுக்கு சத்தத்தை மட்டும் இசையாக கொடுத்தாரா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். உண்மையில் சொல்லப்போனால் டிசி படத்தின் ஹீரோவே அனியின் இசைதான். அந்தப் படத்தில் நல்ல பெயர் வாங்கியவர்; அடுத்ததாக ஜெயிலர் 2 முதல் சிங்கிளில் விமர்சனத்தை சந்தித்திருக்கிறார்.

விரைவில் திருமணம்?: இதற்கிடையே அனிருத்துக்கு 30 வயதுக்கு மேல் ஆகிறது. இத்தனை நாட்கள் அவர் சிங்கிளாகவே வலம் வந்தார். எப்போது திருமணம் என்று அவரிடம் கேட்டால்கூட கழுவும் மீனில் நழுவும் மீனாக எஸ்கேப் ஆகிவிடுவார். ஆனால் இப்போது அவரது மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறதாம். அதாவது அவருக்கும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் காதல் மலர்ந்துவிட்டதாகவும்; அந்தக் காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எப்போது திருமணம்?: மேலும், வரும் நவம்பர் மாதத்தில் க்ரீஸ் நாட்டில் வைத்து திருமணம் செய்து வைக்க இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்திருக்கிறார்களாம். இந்தத் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வரவில்லைதான். அதேசமயம் அனியின் உறவினரும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் கடந்த மாதத்தில் கொடுத்திருந்த ஒரு பேட்டியில் இந்தத் திருமணம் குறித்து உறுதிப்படுத்தியிருந்தார். விரைவில் அவர்கள் குடும்பத்திலிருந்து அறிவிப்பு வரலாம் என்று தெரிகிறது.

சித்தி மகனுக்கு திருமணம்: க்ரீஸ் நாட்டில் நடக்கும் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைப்பதற்கு பிளான் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்நிலையில் அனிருத்தின் சித்தி மகன் அஷ்யுத்துக்கு நேற்று கோவையில் வைத்து ஜோராக திருமணம் நடைபெற்றிருக்கிறது. அன்னப்பூர்ணா ஹோட்டலில் நடந்த திருமணத்தில் அனிருத், ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும், நெருங்கிய உறவினர்களும் கலந்துகொண்டார்கள். அனி பட்டு வேட்டி, சட்டையில் ஜொலித்தார். அந்த வீடியோவை எல்லாம் பார்த்த ரசிகர்கள் அனிருத்துக்கும் மாப்பிள்ளை கலை வந்துவிட்டதே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.