அஞ்சலி வந்தாலே தெரிந்துவிடும்.. சூரி ஓபன் டாக்.. ஏழு கடல் ஏழு மலை விழாவில் செம ஃபன்
சென்னை: ராம் இயக்கத்தில் அஞ்சலி, நிவின் பாலி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. நீண்ட வருடங்கள் கழித்து அஞ்சலி இதில் ஹீரோயினாக ரீ என்ட்ரி கொடுப்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் அஞ்சலி குறித்து சூரி பேசிய விஷயம் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு க்ளாசிக்காக இருந்ததை அடுத்து முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்றார் அஞ்சலி. இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக்கொண்டே சென்ற அஞ்சலி மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார். மேலும் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனந்தி, கனி கேரக்டர்கள்: அஞ்சலி நடித்த படங்களில் தன்னுடைய கேரக்ட்ரை எப்போதும் பேச வைத்துவிடுவார். குறிப்பாக கற்றது தமிழ் படத்தில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நிஜமாதான் சொல்றியா என அவர் கேட்கும் இடத்தில் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக உருகிப்போயினர். கற்றது தமிழில் தனது நடிப்பை நிரூபித்த அஞ்சலிக்கு அடுத்த முக்கியமான படம் அங்காடித் தெரு. கனி என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். தொடர்ந்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக நீடிப்பார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கும் சூழல் உருவானது.
ராம் இயக்கத்தில்: இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்தவகையில் விஷாலுக்கு ஜோடியாக மகுடம் படத்தில் நடித்தார். அடுத்ததாக இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை நடித்திருக்கிறார். கற்றது தமிழ் படம் மூலம் எப்படி தன்னை மிகச்சிறந்த நடிகையாக அடையாளப்படுத்தினாரோ அதேபோல் ஏழு கடல் ஏழு மலை படமும் தனக்கு மிகச்சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் அவர் இருக்கிறார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி ரிலீஸ்: இப்படத்தில் அவருடன் நிவின் பாலி, சூரி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். அக்டோபர் ஒன்றாம் தேதி படமானது திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. ட்ரெய்லரும் பெரிய வரவேற்பையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் அஞ்சலி குறித்து சூரி பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அஞ்சலி பற்றி: அவர் பேசுகையில், "அஞ்சலி ஒரு இடத்துக்கு வருகிறார் என்றால் அவர்தான் வருகிறார் என்பது தெரிந்துவிடும். அதேபோல் போன பிறகும் தெரிந்துவிடும்.ஏனெனில் வரும்போது அஞ்சலி சிரிப்போடுதான் வருவார். மெதுவாக வருவது, இரண்டு விரல்களில் சாப்பிடுவது எல்லாம் அஞ்சலிக்கு வராது. ஒரு நண்பர் மாதிரிதான் அஞ்சலி. அவரிடம் கொஞ்சம்கூட ஒளிவு மறைவு இல்லாதவர். இன்னும் எத்தனை வருடங்கள் போனாலும் அஞ்சலி இதே அழகோடு இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்றார்.