📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 17, 2026 08:34 PM

அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை

அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

இந்நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 6 படுகொலைகள் நடைபெற்றுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக தான் இந்த அரசு நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்ல, விலைவாசி கடந்த 4 மாதங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சீரான மின் வினியோகம் இல்லை. பல ஊர்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

பிரச்சனைகளை திசைதிருப்பும் தவெக அரசு

இதையெல்லாம் சரிசெய்ய முடியாத அரசு, பிரச்சனைகளை திசைதிருப்பும் போக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் ரெய்டு என்கிற பெயரில் மடைமாற்றப் பார்க்கிறது.

தி.மு.க. வரலாற்றில் கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு ரெய்டுகளைச் சந்தித்து இருக்கிறோம். எதிலும் உண்மை இல்லாத காரணத்தினால் இதுவரை எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.

த.வெ.க. ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது. இதனை எங்களது சட்டத்துறை ஆதாரத்துடன் சேகரித்து வருகிறது.

த.வெ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஊழல்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.