‘அப்பா இயக்கத்தில் நடிக்கிறேன்!’
‘அப்பா இயக்கத்தில் நடிக்கிறேன்!’ – ‘வேள்பாரி’ குறித்து ஓபன் செய்த அதிதி ஷங்கர்!
‘ஒன்ஸ் மோர்’ பட அனுபவம், தனது சினிமா பயணம் மற்றும் ‘வேள்பாரி’ படத்தில் நடிப்பது குறித்து நடிகை அதிதி ஷங்கர் பகிர்ந்த தகவல்களை விரிவாக பார்போமா?
இன்னிக்கு அப்பாவோட பர்த்டே! ஈவ்னிங் வீட்ல செலிப்ரேஷன் இருக்கு. கொஞ்சம் குயிக்கா பேசிடலாமா?!" -அன்பாகப் பேச அமர்கிறார், அதிதி ஷங்கர். பிரமாண்டப் படங்களின் இயக்குநர் ஷங்கர் மகள் என்கிற எந்த பந்தாவும் இல்லாத நடிகை.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் காந்த், நடிகர் அர்ஜுன் கூட்டணியில் உருவாகியுள்ள 6 தாஸ்ன் 'ஒன்ஸ் மோர்' படத்தில் 'அஞ்சலி' என்கிற கேரக்டரில் அசத்தியிருக்கிறார், அதிதி. தொடர்ந்து அவருடன் பேசியதிலிருந்து....
'ஒன்ஸ் மோர்' ரொமான்டிக் லவ் ஸ்டோரி காம்போவே வித்தியாசமாக இருக்கிறது. இதில் என்ன சொல்ல வருகிறீர்கள்?
"தமிழ்ல இதுக்கு முன்னே விஷ்ணுவர்தனோட 'நேசிப்பாயா'வில் வொர்க் பண்ணேன். அது பக்கா ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படம். அடுத்ததா, தெலுங்குல 'பைரவம்' என்னோட அறிமுகப் படம். சின்ன இடைவெளிக்குப் பிறகு இப்போ 'ஒன்ஸ் மோர்'. இது அவுட் அண்ட் அவுட் பக்கா லவ் ஸ்டோரி! ரகு கேரக்டர்ல நடிக்கிற அர்ஜுன் தாஸ் லைஃப்ல ஹார்ட் புரோக்கன் நடக்குது. அந்த டைம்ல அஞ்சலியா வர்ற நான் அவரைத் தேடிப் போறேன். அதுக்குப் பிறகு என்னெல்லாம் ஆகுதுங்கிறதுதான் கதை.
சீரியஸான படங்களுக்கு நடுவுல வர்ற ஃபீல் குட் லவ் படம். ஸ்ட்ரெஸ், அது இதுன்னு ஓடிக்கிட்டிருக்கிற நேரத்துல எல்லாத்தையும் தூக்கி ஓரமா வெச்சிட்டு ரெண்டு மணி நேரம் ஜாலியா செலவழிக்கலாம்." நீங்கள் அறிமுகமான 'விருமன்' படம் தொடங்கி நடிக்காத படங்களிலும் பாடகியாக அசத்தி வருகிறீர்கள். 'ஒன்ஸ் மோர்' ஒரு பியூர் லவ் ஸ்டோரி. நீங்கள் பாடவில்லையாமே?"'ஒன்ஸ் மோர்'ல குட்டிக் குட்டியா 12 பாட்டுங்க இருக்கு. இயக்குநர் கிட்ட, 'எனக்குப் பாடுறதுல ரொம்பவே ஆர்வம் அதிகம். வாய்ப்பு இருந்தா சொல் லுங்க!'ன்னேன். அதுக்கான சூழல் கதையில இல்ல அதுக்காக அவர்கிட்ட சண்டை போட முடியாதே!
அமையலன்னு விட்டுட்டேன்.” அறிமுகமான நான்கு ஆண்டுகளில் இப்போதுதான் ஐந்தாவது படம்? ஏன் இந்த இடைவெளி?
"பொறுமையா, நிதானமா சூஸ் பண்ணுவோம்கிறதுதான் என் பாணி. வேக வேகமா கதைகளைப் பிடித்து என்ன பண்ணப்போறோம்! ஒரு கதையைச் சொல்லும்போது, அந்த ஸ்டோரியும் கேரக்டருக்கும் நம்மோட கனெக்ட் ஆகுறமாதிரி இருக்கான்னு பார்ப்பேன். அப்புறம்தான் டிக் பண்றேன். இந்த 'ஒன்ஸ் மோர்'ல கூட அஞ்சலி ரோல் என்னோட ஒரிஜினல் கேரக்டரோட 95 சதவீதம் ஒத்துப்போகும். அதனாலதான் கதை கேட்டதும் பிடிச்சுப் போச்சு."
சோஷியல் மீடியா இல்லாத 90களின் காதல் கதைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாகி வருகிறதே?
"காதல் கதையை எடுக்கும்போது அதை எந்த ஜெனரேஷனாக இருந்தாலும் தங்களோட கனெக்ட் பண்ணிப்பாங்க. காதல் ஒரு யுனிவர்ஸல் லாங்குவேஜ். நெகட்டிவிட்டி, டாக்ஸிக், கெட்ட வார்த்தை ஆல்கஹால், ஸ்மோக்கிங் இல்லாத ஒரு படத்தை இப்போது எடுப்பதுதான் பெரிய விஷயம். அதை 'ஒன்ஸ்மோர்' கொடுக்கும்."
'கருடன்' திரைப்படம் தந்த ஈர்ப்பில்தான், அது தெலுங்கில் 'பைரவம்' என்ற பெயரில் ரீமேக் ஆகும்போது அங்கே அறிமுகமாவோம் என முடிவெடுத்தீர்களா?
"தமிழ்ல 'கருடன்' பார்த்தேன். வெரி நைஸ்! இந்தப் படத்தை தெலுங்கு ஆடியன்ஸுக்குச் சொல்ல விரும்பினாங்க. 'கருடன்' ஸ்டோரி நல்ல கதையாச்சே! அந்த மாதிரி கதை இன்னொரு லாங்குவேஜ்லவரும்போது, அது வழியா அறிமுகம் ஆவது நல்ல விஷயம்னு நடிச்சேன்."
வீட்டில் அடுத்த ஹீரோ ரெடியாகி விட்டார். தம்பி அர்ஜித் எப்படி நடிக்கிறார் என ஃபீட்பேக் வந்திருக்குமே?
"அர்ஜித் மல்டி டேலன்ட்ஸ் உள்ள பையன். நல்லா டான்ஸ் ஆடுவான். டைரக்ஷனுக்காகப் படிச்சான். சினிமாவுக்கு அவன் தயாரானதும் வீட்ல ஒரு டிஸ்கஷன் போச்சு! 'ஏற்கெனவே வீட்ல ஒரு டைரக்டர் இருக்கார். நீ ஆக்டிங் ட்ரை பண்ணா என்ன?'ன்னு நாங்க சொன்னோம். அவனும் மறுக்காம நடிப்புக்கு ட்ரெயினிங் போனான். இப்போ நடிக்கிற ஸ்கிரிப்ட் அவனுக்கு கரெக்ட்டா இருக்கும்னு அவன் முடிவு பண்ணான். இதோ, ரெண்டு ஷெட்யூல் முடிச்சிட்டு, அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகிட்டான்!”
'வேள்பாரி' படத்தில் அப்பா ஷங்கர் உங்களுக்கு ஒரு ரோல் வைத்திருக்கிறாராமே?"ஆமா..! அப்பா இயக்கத்துல நான் நடிக்கிறேன். மத்த விஷயங்களைப் பேச இப்போ ரொம்ப இயர்லி! அது என்ன கேரக்டர்னு இப்போதைக்குச் சொல்ல முடியாது. 'வேள்பாரி' ஸ்டோரில நானும் இருக்கேன்னு மட்டும் நிச்சயம் சொல்வேன்.”
சினிமா பற்றி வீட்டில் யார் யாரெல்லாம் அதிகம் பேசுவது?
"ஃபேமிலியில நாங்க மூணு பேர் சினிமாவுல இருக்கோம். நான், அப்பா, தம்பி நாங்க மூணு பேரும்தான் பேசியாகணும். ஆனா, ஒருமுறைகூட ஃபீல்டு பத்தி நாங்க டிஸ்கஸ் பண்ணினதே இல்ல. வீட்ல இருக்கும்போது அது ஒன்லி ஃபேமிலிக்கான டைம்."