📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 28, 2026 05:04 PM

தேர்வே கிடையாது, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 25,000+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தேர்வே கிடையாது, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 25,000+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தேர்வே கிடையாது, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 25,000+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தபால் வட்டங்களில் காலியாக உள்ள 25,000க்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் சேவகர் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கிளையக அஞ்சல் தலைவர் (BPM), உதவி கிளையக அஞ்சல் தலைவர் (ABPM) மற்றும் டக் சேவக் (Dak Sevak) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-

முக்கிய தேதிகள்

ஒற்றை முறை பதிவு (One-Time Registration): ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 19, 2026 வரை.

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: செப்டம்பர் 2, 2026 (மாலை 5 மணி முதல்).

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 21, 2026 (மாலை 5 மணி வரை).

விண்ணப்பத் திருத்தம் (Correction Window): செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 24, 2026 வரை.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் indiapost.gov.in/gdsonlineengagement என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி பாடங்களை முதன்மைப் பாடங்களாகப் படித்திருப்பது கட்டாயமாகும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 40 அதற்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு).

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ₹100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: பதவிக்கு ஏற்ப மாதம் ₹10,000 முதல் ₹29,380 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapost.gov.in/gdsonlineengagement க்கு செல்ல வேண்டும்.

'Registration' லிங்கை கிளிக் செய்து, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்ய வேண்டும்.

தேவையான தனிப்பட்ட விவரங்கள் மற்றும் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்களை சரியாகப் பதிவிட வேண்டும்.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

எதிர்காலத் தேவைக்காகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.