Latest News
August 25, 2026 03:04 PM
அரசாங்க ஊழியர்களைத் தரக்குறைவாக பேசிய ஆடவர்மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூரில் அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசிய 47 வயது ஆடவர்மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 26) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவிருக்கிறது.
மார்ச் 14ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கு இடையில் உள்துறை அமைச்சுக்கும் காவல்துறைக்கும் பல மின்னஞ்சல்களை ஆடவர் அனுப்பியதாகக் காவல்துறை அறிக்கை வெளியிட்டது.
காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்புகளின்போது ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்த அவதூறான, துன்புறுத்தும் வகையிலான கருத்துகள் அந்த மின்னஞ்சல்களில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
அதையடுத்து அரசாங்க ஊழியர்களை அவமதிக்கும் வகையில் பேசிய குற்றச்சாட்டு ஆடவர்மீது சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 12 மாதங்கள்வரை சிறைத் தண்டனை, $5,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
Latest News