அதிமுக எம்எல்ஏக்கள் 15 பேர் வெளியேற தயாராகி உள்ளனர்: அமைச்சர் செங்கோட்டையன்
கோபிசெட்டிபாளையம்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் வெளியேற தயாராகியுள்ளனர் என்று வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசி உள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது செங்கோட்டையன் பேசியதாவது;
நல்லவேளை, இபிஎஸ் என்னை கட்சியில் இருந்து நீக்கினார். அங்கிருந்து தப்பித்து வந்து இப்போது வருவாய்துறை அமைச்சராக இருக்கிறேன். நீங்கள்தான் நீக்கினீர்கள். அவர் இப்போது கரெக்டாக எங்கே இருக்கிறார் என்று பாருங்கள்.
நாங்கள் அதை செய்வோம், ஆட்சி இன்றைக்கு இருக்காது, நாளைக்கு இருக்காது என்கின்றனர். என்ன... ஆட்சி இருக்காது? போக போக, யானை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அங்கே(அதிமுகவை குறிப்பிடுகிறார்) ஆகிக்கொண்டு இருக்கிறது.
இனி... சீக்கிரம் ஒரு 15 பேர் (எம்எல்ஏக்கள்) வெளியே வர இருக்கின்றனர். இது அவருக்கு (இபிஎஸ்சை குறிப்பிடுகிறார்) தெரியுமா என்று தெரியவில்லை. நேற்றைக்கே கூட்டத்தை கூட்டிவிட்டனர். பேசிக் கொண்டு இருக்கின்றனர், என்ன நடக்கப்போகிறது என்று எனக்கும் தெரியவில்லை, அவர்களுக்கும் தெரியவில்லை.
இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.