📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 13, 2026 01:03 PM

காங்.,கின் அழுகிய பிணங்களை சுமந்ததே தோல்விக்கு காரணம்: தி.மு.க., காட்டம்

காங்.,கின் அழுகிய பிணங்களை சுமந்ததே தோல்விக்கு காரணம்: தி.மு.க., காட்டம்

சென்னை: 'காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும்; இல்லையென்றால், அடக்கப்படும்' என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளது.

அக்கட்சியின் அறிக்கை: கூட்டணியில் இல்லாத கட்சியை நோக்கி கூவும் மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும்; இல்லையென்றால் அடக்கப்படும். சட்டசபை பொதுத்தேர்தலுக்கு முன், தன் திமிர் பேச்சுகளால், தமிழகத்தில் வலுவாக இருந்த பா.ஜ., எதிர்ப்பு கூட்டணியை சீர்குலைத்த, த.வெ.க., அடிமை மாணிக்கம் தாகூர், மீண்டும் தன் வாய் துடுக்கை வெளிப்படுத்தி உள்ளார்.

தி.மு.க.,வின் தோல்விக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுடன் சேர்த்து, மாணிக்கம் தாகூர், கிரிஷ் ஷோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற காங்கிரஸ் புல்லுருவிகள் தெரிவித்த கருத்துக்களும் காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொது வெளியில் கேள்விக்கு உள்ளானது.

தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்து கொண்டே, வேறு கட்சியின், 'ஸ்லீப்பர் செல்'களாக இவர்கள் செயல்பட்டனர். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே கூட்டணி வெற்றிக்காக, உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது.

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையை சேர்த்து சுமந்ததும், கட்சியின் ஓட்டுக்கள் சரிய ஒரு காரணமாகி விட்டது.

அந்த சுமையை துாக்கி எறிந்த பின், மக்களிடம் கட்சிக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. இடைத்தேர்தல் முடிவுகளும் அதையே காட்டுகின்றன. 'இண்டி' கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம்.

இண்டி கூட்டணியில் இல்லாத தி.மு.க., இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில், இணைய வேண்டிய அவசியம் இல்லை; இணைய வேண்டும் என கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை.

மாணிக்கம் தாகூர் சூடு சொரணையுள்ள மனிதராக இருந்தால், 'காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க., தலைவர் விஜய், தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை?' என, கேட்க வேண்டும். பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, தி.மு.க.,வை நோக்கி கூவுகிறார். அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி, வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக்கூடாது.

த.வெ.க., போடும் பிஸ்கட்டுக்காக, தி.மு.க., குறித்து இனி பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதுாறு தொடர்ந்தால், அதற்குரிய விளைவை எதிர்கொண்டே ஆக வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபை பொதுத்தேர்தலுக்கு முன், மதுரையில் நடந்த தி.மு.க., மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் ஸ்டாலின், 'எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் வாயிலாக, பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், தமிழகத்தில் யாருடைய ஓட்டுகளையும் நீக்க விடாமல் தடுத்து விட்டோம்' என்றார்.ஆனால், சட்டசபை தேர்தல், இடைத் தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைந்ததும், 'தி.மு.க., தோல்விக்கு, எஸ்.ஐ.ஆரே காரணம்' என, ஸ்டாலின் பேசி வருகிறார்.வரலாறு காணாத ஊழல், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான தவறான பேச்சுகள், கூட்டணி கட்சிகளை அவமதித்தது போன்றவை தான், தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம். எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதாகக் கூறும் தி.மு.க.,வினர், தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. பா.ஜ.,வை பகைத்துக்கொள்ள நேரிடும் என்ற அச்சமே, இதற்கு காரணம்.தமிழகத்தின் நலன், ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்றவற்றில், தி.மு.க.,வுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரி நடக்கும் போராட்டத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள் பங்கேற்க வேண்டும்.