📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 24, 2026 09:04 AM

அதிர்ந்து போன பழனிச்சாமி ..... செங்கோட்டையன் சொன்னது என்ன?

அதிர்ந்து போன பழனிச்சாமி ..... செங்கோட்டையன் சொன்னது என்ன?

தவெகவின் அடுத்த டார்கெட்... ஷாக்கில் எடப்பாடி? செங்கோட்டையன் சொன்னது என்ன?

அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளளது.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு குரூப்பும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தரப்பில் மற்றொரு குரூப்பும் என இரு பிரிவுகளாகப் பிளவுபட்டு, தற்போது உட்கட்சிப் பூசல் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால் பல எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர்.

ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) உள்ளிட்ட சில எம்எல்ஏக்களும், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைத்து தவெக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளைத் தன் வசப்படுத்தும் வேலைகளில் அக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தவெகவின் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அதிமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தின் மூத்த தலைவராக இருந்து, பின்னர் தவெகவில் இணைந்து தற்போது அமைச்சராக இருக்கக்கூடிய செங்கோட்டையன் பேசுகையில், அதிமுகவில் தற்போது இருக்கக்கூடிய தலைமை மற்றும் கட்சியின் செயல்பாடுகள் அக்கட்சியில் உள்ளோருக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், முதலமைச்சர் விஜயின் இந்த 100 நாள் சாதனை ஆட்சியைக் கண்டு வியந்து, தற்போது அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் 10 எம்எல்ஏக்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாகவும் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே தேர்தல் தோல்வி மற்றும் உட்கட்சிப் பூசலில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக சரிவை சந்தித்து வருகின்றது. அதிமுகவிலிருந்து தவெகவிற்கு இந்த 10 எம்எல்ஏக்களின் சேர்க்கை சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அக்கட்சியின் பலத்தை அசைக்க முடியாத இடத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.

அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சால் அதிமுக வட்டாரங்களில் உள்ள அந்த 10 எம்எல்ஏக்கள் யார்யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் கூறியதாவது, தவெக ஆட்சி ஆறு மாதத்திற்குத்தான் நீடிக்கும் என்று விமர்சனங்கள் வரும் நிலையில், நான் சொல்கிறேன், விஜய் இருக்கும் வரை அவர்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறோம் என்கிறார்கள்.

போய் விலைக்கு வாங்குவதற்கு ஆட்டுச் சந்தையா? இங்கே இருக்கிற தவெக எம்.எல்.ஏக்கள், விஜய் எங்கே குதிக்கச் சொன்னாலும் குதிப்பார்கள். எந்த இடம் என்று பார்க்க மாட்டார்கள். அந்த அளவுக்குத்தான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அதிமுகவில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாட்டுடன் இருக்கும் நிலையில், தவெக அமைச்சர் செங்கோட்டையனின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனின் பேச்சு அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்துள்ளது.