📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news August 25, 2026 05:04 AM

அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்ல... வைரல் வீடியோ பெண் விளக்கம்

அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்ல... வைரல் வீடியோ பெண் விளக்கம்

சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா என தவறாக கூறி, மேலைநாட்டு உடையில் பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ அண்மையில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் உண்மையான பெண் தற்போது "அது நான்தான், அமைச்சர் இல்ல..." என்று உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாக்கப்படும் வீடியோவில் இருப்பது அமைச்சர் கீர்த்தனா அல்ல, அது நான்தான் என்று அந்த பெண் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளார். தேவையற்ற அரசியல் காரணங்களுக்காக தனது வீடியோவை எடுத்து, தவறான தகவல்களுடன் பரப்பி வருவதை பார்த்து கடும் மனவேதனை அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

தனக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், தன்னை பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.