Videos news
August 24, 2026 10:03 PM
காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கலாம்: ஒழுங்காற்று குழு பரிந்துரை
புதுடில்லி: காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கலாம் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்றுக்குழு கூட்டம் பரிந்துரை செய்துள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 141வது கூட்டம் டில்லியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்தது. இக்குழுவின் உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கலாம் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாளை நடக்க உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இந்த பரிந்துரை குறித்து ஆய்வு செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும். காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைப்படி 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
தொடர்புடைய செய்திகள்
Videos news