📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 09, 2026 01:33 AM

அடித்தது அதிர்ஷ்டம்.. IND

அடித்தது அதிர்ஷ்டம்.. IND

அடித்தது அதிர்ஷ்டம்.. IND-க்கு எதிரான டெஸ்ட்.. பின்னடைவில் இலங்கை.. விலகிய 2 முக்கிய வீரர்கள்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இலங்கை அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடக்க டெஸ்ட் போட்டியில் இருந்து பதும் நிசங்கவும், காயம் காரணமாக குசல் மெண்டிஸும் தொடர் முழுவதும் விளையாட மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

இலங்கைக்கு எதிராக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 23ஆம் தேதியும் தொடங்கவுள்ளன. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராகத் தொடங்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிசங்கா, தற்போது இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார்.

மேலும், தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அனுபவமிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசல் மெண்டிஸும் இந்தத் தொடரிலிருந்து விலகுவது ஏற்கெனவே உறுதியாகியுள்ளது. 2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின்போது ஏற்பட்ட வலது தொடை தசைநார் காயத்திலிருந்து குணமடையத் தவறியதால், குசல் மெண்டிஸ் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முழுவதிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக விலக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடர் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், இவ்விரு வீரர்களும் விலகுவது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இவ்விரு வீரர்களும் கலந்துகொள்ளாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.