அட்டோமியின் பெரும்பான்மை பங்குகளை வாங்கும் கிராப்
கிராப் நிறுவனம் அட்டோமி (Atome) நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கவுள்ளது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் அட்டோமி இளையர்கள் இடையே மிகவும் பிரபலமானது.
‘இப்போது வாங்குங்கள், கட்டணத்தைப் பின்னர் செலுத்துங்கள்’ (buy-now-pay-later) என்ற முறையில் செயல்படும் அட்டோமியை $1.9 பில்லியனுக்கு வாங்க கிராப் ஒப்புக்கொண்டுள்ளது.
அட்டோமியின் தாய் நிறுவனமான அட்வான்ஸ் இன்டெலிஜென்ஸ் குரூப் உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 60 விழுக்காட்டுப் பங்குகளைக் கிராப் நிறுவனம் வாங்குவதாகச் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15), வெளியிடப்பட்ட அறிக்கையில் அது தெரிவித்தது.
அட்டோமியை வாங்குவதன் மூலம் தென்கிழக்காசிய வட்டாரத்தில் வாடகை கார் சேவையில் மட்டுமில்லாமல் பயனீட்டாளர்களுக்கு கடன் வழங்கும் தொழிலும் கிராப் நிறுவனம் வலுவான இடத்தைப் பிடிக்க உதவும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.