📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 23, 2026 02:01 PM

அவ என் பொண்ணு மாதிரி.. மமிதா பைஜூவை அடிக்கல.. வாய் திறந்த இயக்குநர் பாலா!

அவ என் பொண்ணு மாதிரி.. மமிதா பைஜூவை அடிக்கல.. வாய் திறந்த இயக்குநர் பாலா!

சென்னை: தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'வணங்கான்'. இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ்' மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்க, ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின், சண்முக ராஜன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இத்திரைப்படத்தில் சூர்யா நாயகனாகவும், 'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்த நடிகை மமிதா பைஜூ நாயகியாகவும் ஒப்பந்தமாகி, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், கதையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக சூர்யா படத்திலிருந்து விலகியதை தொடர்ந்து, அருண் விஜய்யை வைத்துப் படத்தை இயக்கி முடித்தார் பாலா.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அடி?: ஏற்கனவே இயக்குநர் பாலா தனது படங்களில் நடிக்கும் நடிகர்களை நடித்துக் காட்டுகிறேன் என்ற பெயரில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிப்பார் என்றும், அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்ததாகவும் செய்திகள் உலவின. அந்த வகையில், 'வணங்கான்' படப்பிடிப்பின் இயக்குநர் பாலா தன்னை அடித்ததாகவும், அதனால் தான் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் மமிதா பைஜூ கூறியதாக ஒரு செய்தி பரவியது.இது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

அவ என் மக மாதிரி: இந்த சர்ச்சை குறித்து பேட்டி பேசிய இயக்குநர் பாலா, மமிதா என் மகள் மாதிரி... அவளை நான் அடிப்பேனா? அதுவும் ஒரு பொம்பள பிள்ளையை யாராவது அடிப்பார்களா? அவ ரொம்ப சின்னப்பிள்ளை, அவளை யாராவது அடிப்பாங்களா? மும்பையில் இருந்து வந்த மேக்கப் மேன்கள், அவளைக் கூப்பிட்டு மேக்கப் போட்டுவிட்டார்கள். அவளும் மேக்கப் போட்டா பாலா சாருக்குப் பிடிக்காது என்று அவர்களிடம் சொல்ல தெரியவில்லை. ஷாட் எடுப்பதற்கு வந்ததும் அவளது முகத்தில் இருந்த மேக்கப்பை பார்த்து 'யாரு உனக்கு மேக்கப் போட்டா?' எனக் கையைத் தான் தூக்கினேன்... உடனே நான் அடித்துவிட்டேன் என செய்தியைப் பரப்பிவிட்டார்கள் என பாலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அடுத்த படங்களில் மமிதா: வணங்கான் படத்திலிருந்து விலகிய பிறகு, மலையாளத்தில் 'பிரேமலு' படத்தின் மூலம் பான்-இந்தியா அளவில் பெருவாரியான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த மமிதா பைஜூ, தமிழில் 'டியூட்' திரைப்படத்தில் நடித்துத் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். தற்போது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அதிக கோரிக்கைகளுடன் கூடிய நடிகையாக மாறியுள்ள இவர், தொடர்ந்து கரா, ஜனநாயகன், விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.